சிவப்பு அவல் பாயசம்

Loading...

சிவப்பு அவல் பாயசம்
தேவையானவை:
சிவப்பு அவல் – ஒரு கப், பால் – 2 கப், முந்திரி – 8 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்), சர்க்கரை – ஒரு கப், தேங்காய்த் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.


செய்முறை:
வாணலியில் நெய் விட்டு சிவப்பு அவலை லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும். பாலை நன்கு காய்ச்சி அதில் பொடித்த அவல், முந்திரி விழுது சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிட்டு, சற்று கெட்டியானதும் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு கிளறு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply