சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்த தடை விதித்ததா சென்னை ஜகோர்ட்

Loading...

சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்த தடை விதித்ததா சென்னை ஜகோர்ட்

சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்த தடை விதித்ததா சென்னை ஜகோர்ட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை போலவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கிரிக்கெட் போட்டி சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி.நேற்று முதல் இந்த ஆண்டிற்கான சிசிஎல் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியுள்ளது.இந்நிலையில் இரண்டு பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் இணைந்து சிசிஎல் போட்டிகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளன. அவர்கள் தாக்கல் செய்த மனுவில் “‘கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கான ஸ்பான்சர் நிறுவனமாக கார்பன் மொபைல் நிறுவனம் செயல்பட்டது. இந்த போட்டியை ஒளிபரப்பு செய்ததற்காக தொகையை இன்னும் எங்களுக்கு வழங்கவில்லை. எனவே, தற்போது ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த நீதிபதி, நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்க முடியாது. பணம் தொடர்பான விஷயங்களை குறித்து பேச ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி மோகன்ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் முன்பு இருதரப்பினரும் ஆஜராகி சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply