சாமைப் பொங்கல்

Loading...

சாமைப் பொங்கல்

தேவையானவை:
சாமை – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், தண்ணீர் – 3 கப், உப்பு – சுவைக்கேற்ப, நெய் – 3 டீஸ்பூன், மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி – தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1, முந்திரி – 10, பால் – ஒரு கப், பெருங்காயத் தூள் – ஒரு டீஸ்பூன்.செய்முறை:
சாமையையும் பாசிப்பருப்பையும் தனித்தனியாக, வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். குக்கரில் பால், தண்ணீர் விட்டு, வறுத்த சாமை, பருப்பு சேர்த்து, உப்புப் போட்டு வேகவைக்கவும். நெய்யில் சீரகம், பெருங்காயம் தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, முந்திரியை வறுத்து, பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


பலன்கள்:
இதில் கலோரிகள் மிகக் குறைவு. ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. புரதமும் இதில் இருப்பதால், காலை உணவாகச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் நெய், முந்திரி தவிர்த்துச் சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply