சாக்லேட் பாதுஷா

Loading...

சாக்லேட் பாதுஷாதேவையானவை: மைதா மாவு – 150 கிராம், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, உப்பு – அரை சிட்டிகை, சர்க்கரை – 250 கிராம், பால் – ஒரு டீஸ்பூன், சாக்லேட் துருவல் (கடைகளில் விற்கும் காபி சாக்லேட் போதுமானது) – 3 டீஸ்பூன், எண்ணெய் – கால் கிலோ, நெய் – 2 டீஸ்பூன், கலர் கொப்பரைத் துருவல் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன், தயிர் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:சர்க்கரையில் ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு ஒரு டீஸ்பூன் பால்விட்டு, மேலே படியும் அழுக்கை நீக்கவும். நன்கு கொதிக்கும்போது துருவிய சாக்லேட் சேர்த்து கரையவிட்டு இறக்கவும் (பிசுக்கு பதம் வரவேண்டும்). சமையல் சோடா, உப்பு, 2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு நுரைக்க கையால் தேய்த்து… மைதா, தயிர், சிறிதளவு நீர் சேர்த்து பூரி மாவு போல் பிசையவும். மாவை பெரிய எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக உருட்டி தட்டி, எண்ணெயில் பொரிக்கவும். பொரித்தவற்றை சாக்லேட் – சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்து, தாம்பளத்தில் வைத்து, மேலே கலர் கொப்பரை துருவல் தூவி பரிமாறவும்.
குறிப்பு: பொரித்த பாதுஷாவை சூடான சர்க்கரைப் பாகில் போட்டால் விரைவில் கெட்டுவிடும். பாகு சற்றே ஆறியபின் பாதுஷாவை சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply