சர்க்கரை – முந்திரி அதிரசம்

Loading...

சர்க்கரை - முந்திரி அதிரசம்தேவையானவை:பச்சரிசி மாவு – 2 கப், சர்க்கரை – 3 கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பொடித்த முந்திரி – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 300 கிராம், பால் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: சர்க்கரையில் முக்கால் கப் நீர் விட்டு, 10 நிமிடம் கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் பால் விட்டு, மேலே படியும் அழுக்கை நீக்கி… இளம் கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். அதில் அரிசி மாவு, பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூளை சேர்த்து நன்கு மாவிளக்கு மாவு போல் கலந்து வைக்கவும். சிறிது மாவை எடுத்து, வாழை இலையில் வைத்து தட்டவும். எண்ணெயை காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தட்டி வைத்த அதிரசத்தை பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால், வெள்ளை எள் சிறிது சேர்த்தும் செய்யலாம். சர்க்கரை அதிரசம் ‘வெள்ளை வெளேர்’ என்று இருக்க வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply