சருமம் பொலிவுக்கு எளிய வழிகள்

Loading...

சருமம் பொலிவுக்கு எளிய வழிகள் பீட்ரூட்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சியில் இட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். இந்த பீட்ரூட் சாறைப் பிழிந்து அதை முகத்தில் பூசி ஐந்து நிமிடம் மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.
சந்தனப் பொடியை ரோஸ் வாட்டருடன் குழைத்து அதனுடன் நான்கு(அ)ஐந்து துளி பால் விட்டு முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
தேனை சூடு செய்து அதனுடன் எலுமிச்சை சாற்றைக் கலந்து முகத்தில் தடவுங்கள். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
காலையில் எழுந்ததும் தண்ணீரில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இது சருமத்தைப் பொலிவாகவும், மென்மையாகவும் இருக்க உதவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply