சருமத்தை மென்மையாக்கும் பட்டர்

Loading...

சருமத்தை மென்மையாக்கும் பட்டர்அழகாக இருப்பதற்கு முகம் மட்டும் அழகாக இருந்தால் போதாது. உடல் முழுவதும் அழகாக இருக்க வேண்டும். சருமத்தை மென்மைப்படுத்த பயன்படுத்தும் அழகுப் பொருட்களில் பட்டர் மிகவும் சிறப்பான பங்காற்றுகிறது.

ஏனெனில் அது சருமத்தில் நீண்ட நேரம் ஈரப்பசையை வைத்திருக்கும். இதனால் சருமத்தில் இருக்கும் திசுக்கள் மென்மையடைவதோடு, சருமத்திற்கு அழகையும் தருகிறது.

• அரை கப் கற்றாழை ஜெல் மற்றும் ஷியா பட்டரை எடுத்து கலந்து உடலுக்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால் சருமமானது நன்கு மென்மையாக இருக்கும்.

• உடல் நல்ல வாசனையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்,
7-8 துளிகள் லாவண்டர் எண்ணெயை, பட்டருடன் கலந்து உடலுக்கு தேய்க்கலாம். இதனால் அந்த நாள் முழுவதும் உடல் ழுமுவதும் நல்ல வாசனை இருக்கும்.

• ஒரு அரை கப் கொக்கோ பட்டருடன் 10 துளிகள் ஆலிவ் ஆயிலை விட்டு கலந்து உடலுக்கு தடவி வந்தால், சருமமானது மென்மையாவதோடு, வறண்ட சருமமானது போய்விடும்.

• அரை கப் கொக்கோ பட்டருடன், 10 துளிகள் ரோஸ் வாட்டர் மற்றும் 6 துளிகள் எலுமிச்சை எண்ணெய் சேர்த்து கலந்து தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமமானது பொலிவுடன் காணப்படும்.

Loading...
Rates : 0
VTST BN