சன்னா ஆலு சாட்

Loading...

சன்னா  ஆலு சாட்
தேவையானவை:
வெள்ளை சன்னா (வெள்ளை கொண்டைக்கடலை) – ஒரு கப் , உருளைக்கிழங்கு – 2 (சதுர சதுரமாக, மெலிதாக கட் செய்து கொள்ளவும்), மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:
சன்னாவை முதல் நாளிரவே ஊற வைத்து, மறுநாள் காலையில் நன்கு வேக வைக்கவும். நறுக்கிய உருளைகிழங்கை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பொரித்த உருளையுடன் வெந்த சன்னா, மிளகுத்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து, பொடி யாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply