சந்திரனில் உருவாகப்போகும் கிராமங்கள்? | Tamil Serial Today Org

சந்திரனில் உருவாகப்போகும் கிராமங்கள்?

Loading...

சந்திரனில் உருவாகப்போகும் கிராமங்கள்2030 ஆம் ஆண்டிற்குள் சந்திரனில் கிராமங்கள் அமைக்கப்படுவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன என்று கோள்களை பற்றிய நிலவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் அமெரிக்க ஆய்வாளர் Clive Neal தெரிவித்துள்ளார்.
சந்திரனில் மனிதர்கள் ஏற்கனவே கால்பதித்துவிட்ட நிலையில், தற்போது அங்கு கிராமங்கள் அமைப்பதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதுதொடர்பாக பேசிய Clive Neal, இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் நாங்கள், சந்திரனின் மனிதர்கள் வாழலாம் என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும், இதற்காக, கிராமங்களுக்கு தேவையான சரியான அளவு, அதன் வடிவம் போன்றவை குறித்து முதலில் ஆராயப்படவேண்டும்.

அதன்பின்னர், வடிவங்கள் மற்றும் கிராமங்கள் அமைக்கப்படும் இடங்களுக்கேற்றவாறு கிராமங்களை அமைப்பது குறித்து செயல் விளக்கமளித்த பின்னர், கிராமங்களை சந்திரனில் உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கலாம் என கூறியுள்ளார்.

தற்போது, மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியின் மூலம், 2030 ஆம் ஆண்டிற்குள் சந்திரனில் கிராமங்கள் அமைவது சாத்தியமாகும் எனக்கூறியுள்ளார்.

Loading...
Rates : 0
VTST BN