சத்தான பழ பாயசம்

Loading...

சத்தான பழ பாயசம்தேவையானவை:

ஆரஞ்சு (உரித்து கொட்டை நீக்கியது) – 1
நறுக்கிய அன்னாசி – 2 துண்டுகள்
மாதுளை முத்துக்கள் – கால் கப்
நறுக்கிய சிறிய கொய்யா – 1
திராட்சை – 20 பால் – ஒரு கப்
சுகர் ஃப்ரீ சர்க்கரை – தேவையான அளவு
சேமியா – 100 கிராம்.

செய்முறை:

• பழங்களை நன்கு கழுவிக் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டவும்.

• வடிகட்டிய ஜுசுடன் காய்ச்சி ஆற வைத்த பால், சுகர் ஃப்ரீ சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து தனியே வைக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதித்ததும் சேமியாவை சேர்த்து வேக வைத்து இறக்கவும்.

• இந்த வேக வைத்த சேமியாவுடன் ஜூஸ் கலவையை சேர்த்து நன்கு கலந்தால், சத்தான பழ பாயசம் ரெடி!

குறிப்பு: டயட்டில் இருப்பவர்கள் ஸ்வீட் சாப்பிட ஆசைப்படும்போது குறைந்த கலோரிகள் உள்ள இதனைச் செய்து சாப்பிடலாம்.

Loading...
Rates : 0
VTST BN