சக்கர் பாரா

Loading...

சக்கர் பாராதேவையானவை: மைதா, சர்க்கரை – தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, கேசரி கலர் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 250 கிராம், நெய் – அரை டீஸ்பூன்.

செய்முறை:மைதாவை, அரை டீஸ்பூன் நெய் விட்டு, சிறிதளவு நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, அப்பளமாக இட்டு விருப்பமான வடிவில் (சதுரம்/நீள்சதுரம்/டைமண்ட்) ‘கட்’ செய்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் சேர்த்து, கேசரி கலரும் சேர்த்து, பாகு காய்ச்சவும். பாகு நன்கு பூத்து வரும் நிலையில் இறக்கி, பொரித்த மைதா துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி எடுக்கவும். மேலே ஏலக்காய்த்தூள் தூவவும். ஓரிரு நிமிடங்களில் பாகு நன்கு படிந்ததும்… கலர்ஃபுல் சக்கர் பாரா ரெடி.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply