கோழி வெப்புடு

Loading...

கோழி வெப்புடு
தேவையானவை:

சிக்கன் – 200 கிராம் (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
சின்னவெங்காயம் – 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
சிறியதாக நறுக்கிய தக்காளி – 1 சிறியது
பச்சை மிளகாய் – 2 (நீளமாக நறுக்கவும்)
கறிவேப்பிலை – தேவையான அளவு
சோம்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 20 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 15 கிராம்
மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 40 மில்லி
இஞ்சி-பூண்டு விழுது – 15 கிராம்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும். இத்துடன் சிக்கன் துண்டுகள் சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து தண்ணீர் சுண்டியதும் கொத்தமல்லித்தழையைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:

தயிர் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி, ரொட்டிக்கு நல்ல சைடிஷ்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply