கோயில் புளியோதரை

Loading...

கோயில் புளியோதரை
தேவையானவை:
பச்சரிசி – 2 கப், புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, உப்பு, நல்லெண்ணெய், கறிவேப்பிலை – தேவையான அளவு.


பொடி செய்ய:
தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், சிறிய விரலி மஞ்சள் – 2, மிளகு – 2 டீஸ்பூன்.

செய்முறை:
பச்சரிசியை உதிர் உதிரான சாதமாக வடித்து ஆறவிடவும். புளியை ஒன்றரை கப் நீரில் கரைத்து வடிகட்டவும். பொடி செய்யக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து… புளிக் கரைசல், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கறிவேப்பிலை சேர்த்து வைக்கவும். சாதத்தில் புளிக்கலவை, வறுத்துப் பொடித்த தூள் சேர்த்து நன்கு கிளறினால்… மணக்க மணக்க கோயில் புளியோதரை தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply