கோபி வேர்க்கடலை பட்டீஸ்

Loading...

கோபி  வேர்க்கடலை பட்டீஸ்
தேவையானவை:
காலிஃப்ளவர் – ஒரு கப் (சிறு சிறு பூக்களாக ஆய்ந்தது), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), வறுத்த வேர்க்கடலை – அரை கப் (ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடிக்கவும்), பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு.
பட்டீஸ் செய்ய: மைதா – ஒரு கப், கார்ன்ஃப்ளார் – அரை கப், உப்பு – ஒரு சிட்டிகை.


செய்முறை:
ஆய்ந்த காலிஃப்ளவருடன் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கும் நீரில் 2 நிமிடம் போட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு… வெங்காயம், காலிஃப்ளவர், பொடித்த வேர்க்கடலை, பச்சை மிளகாய் – இஞ்சி – பூண்டு விழுது எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கி, கொத்தமல்லி தூவி தனியே வைக்கவும்.
மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டு மாவு பிசைந்து, சின்ன சின்ன வட்ட பூரிகளாக திரட்டவும். ஒரு வட்டத்தின் மேல் ஒரு டீஸ்பூன் காலிஃப்ளவர் கலவையை சற்று பரவலாக வைத்து, அதன் மேல் மற்றொரு வட்டத்தை வைத்து, ஓரங்களை நன்கு ஒட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply