கோதுமை ஃப்ரூட் பாஸ்தா

Loading...

கோதுமை ஃப்ரூட் பாஸ்தா
தேவையானவை:

கோதுமை – 200 கிராம்
முட்டை – 2
ஆலிவ் எண்ணெய் – 10 மில்லி
ஆப்பிள் துண்டுகள் – 100 கிராம்
உலர் திராட்சை – 20 கிராம்
பொடித்த முந்திரி, பாதாம் – 20 கிராம்
உப்பு, வெண்ணெய், தண்ணீர் – தேவையான அளவு.


செய்முறை:

கோதுமையில் முட்டையை உடைத்து ஊற்றி, ஆலிவ் எண்ணெய், சிறிது உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். இதை அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஆப்பிள் துண்டுகள், உலர் திராட்சை, முந்திரி, பாதாம் சேர்த்து நன்கு கிளறி ஆற விடவும். மாவை எடுத்து இரண்டு சிறிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தேய்த்த சப்பாத்தி ஒன்றின் மேல் ஆப்பிள் மசாலாவை பரவலாகத் தடவி, மற்றொரு சப்பாத்தி மாவால் மூடி, ஓரங்களை நன்கு அழுத்தவும் 20 நிமிடம் கழித்து ஓரங்களைப் படத்தில் உள்ளது போல லேசாகக் கீறி விடவும். இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இனி இட்லித் தட்டில் சப்பாத்திகளை வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும். இதனை தக்காளி சாஸ் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:
குழந்தைகளுக்கு ஃபுரூட் ஜாமுடன் சேர்த்துக் கொடுக்கலாம். சத்தான உணவு.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply