கோடைக்கால அழகுக் குறிப்புகள்!

Loading...

கோடைக்கால அழகுக் குறிப்புகள்!கோடைக்கால அழகுக் குறிப்புகள்ஃப்ரூட் ஃபேஷியல்

ஆப்பிள்,ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம் ஆகிய நான்கு பழங்களையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதை நன்கு மசித்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் போதும். முகம் பளிச்சிடும். இதை செய்தால் முகம் பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். 15 நாள்களுக்கு ஒருமுறை இதை முயற்சிக்கலாம்.பொட்டுக்கடலை ஃபேஸ்பேக்

4 தேக்கரண்டி பொட்டுக்கடலைப் பொடியுடன் 3 தேக்கரண்டி தாழம்பூ தண்ணீர் அல்லது பன்னீர் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் “பளிச்’ என்ற தோற்றம் கிடைக்கும்.ஹேர் ஆயில்

தலா ஒரு கைப்பிடியளவு மருதாணி மற்றும் கருவேப்பிலையை கால் கைப்பிடியளவு துளசியுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். மிதமான சூட்டில் இருக்கும் நல்லெண்ணெயில் அரைத்த விழுதைப் போட்டு எண்ணெய் ஆறியதும் வடிகட்டினால் ஹேர் ஆயில் தயார்.

சருமம் பளிச்சிட

வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்தவுடன் 2 தேக்கரண்டி சமையல் சோடா, அரிசிமாவு, ஒரு தேக்கரண்டி அரைத்த எலுமிச்சைத் தோல் மூன்றையும் கலந்து முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடம் கழித்து ஒரு துணியால் மேல்நோக்கி துடைத்துவிடுங்கள். சருமத்தில் படிந்துள்ள அழுக்குகள் இருந்த இடம் தெரியாமல் போகும். சருமம் பளபளக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply