கோஃப்தா பிரியாணி

Loading...

கோஃப்தா பிரியாணி
தேவையானவை:
பாசுமதி அரிசி – 2 கப், வெங்காயம், தக்காளி – தலா 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி துருவல், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. கோஃப்தா செய்ய: முந்தைய நாள் இரவே ஊறவைத்த கொண்டைக்கடலை – முக்கால் கப், சோம்பு, நறுக்கிய இஞ்சி – தலா ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, எலுமிச்சைச் சாறு – அரை மூடி, உப்பு – சிறிதளவு. தாளிக்க: எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, பிரியாணி இலை – 1, ஏலக்காய், கிராம்பு – தலா 2.
செய்முறை:
ஊறவைத்த கொண்டைக்கடலையுடன் இஞ்சி, சோம்பு, உப்பு, பச்சைமிளகாய், எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து, சிறிய உருண்டைகளாகப் பிடித்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கோஃப்தா ரெடி! குக்கரில் நெய், எண்ணெய் விட்டு சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, தக்காளி, வெங்காயம், துருவிய இஞ்சி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், பொரித்த உருண்டைகளை சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் உப்பு, கழுவிய அரிசியை சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, மெதுவாக கிளறவும். குக்கரை மூடி, அடுப்பை சிம்மில் வைத்து 8 முதல் 10 நிமிடம் வேக விடவும். மேலாக சிறிது நெய் விட்டு, புதினா தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply