கொழுப்பை கரைக்கும் அவகோடா | Tamil Serial Today Org

கொழுப்பை கரைக்கும் அவகோடா

Loading...

கொழுப்பை கரைக்கும் அவகோடாமனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது அவகோடா பழம்.

இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.

இதில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்ததாகும்.

மேலும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும்.

இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அவகோடா பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்னைகளை சரிசெய்வதாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே எலும்புகள் வலிமையடைகின்றன.

மேலும் சிறுநீரக பிரச்னையால் அவதிப்படாமல் இருக்கவும், தெளிவான கண்பார்வைக்கும் அவகோடா பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வருவது அவசியமாகும்.

Loading...
Rates : 0
6
7
VTST BN
9
10
11