கொப்பரை வெல்ல அதிரசம்

Loading...

கொப்பரை வெல்ல அதிரசம்தேவையானவை: பச்சரிசி மாவு – ஒன்றரை கப், பாகு வெல்லம் – 2 கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, துருவிய கொப்பரை – 4 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:பச்சரிசி மாவில் ஏலக்காய்த்தூள், துருவிய கொப்பரை சேர்த்து நன்கு கலக்கவும். வெல்லத்தில் ஒரு கப் நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றி ஒரு கொதி வரவிட்டு, இறக்கவும். பாகில் அரிசி மாவு கலவையை சேர்த்து கைவிடாது கிளறி, இறக்கி மூடி வைக்கவும். மறுநாள் மாவில் சிறிது எடுத்து வாழை இலை/ பிளாஸ்டிக் தாளில் அதிரசமாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். அதிரசத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை ஜல்லி கரண்டியால் அழுத்தி எடுத்தால்… சுவையில் ஊரைக்கூட்டும் கொப்பரை – வெல்ல அதிரசம் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply