கேழ்வரகு மிக்ஸர்

Loading...

கேழ்வரகு மிக்ஸர்
தேவையானவை:
கேழ்வரகு – 200 கிராம், மிளகாய்த் தூள் – சிறிதளவு, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பொரித்த அவல் – தலா 50 கிராம், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ள வேண்டும். இதில் உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, கெட்டிப் பதத்தில் பிசைய வேண்டும். மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனுடன், பொட்டுக்கடலை, வேர்க்கடலை பொரித்த அவல் சேர்த்தால், சுவையான கேழ்வரகு மிக்ஸர் ரெடி!

பலன்கள்:
கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயாமின், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளன. தோல் அலர்ஜியை நீக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடலுக்கு வலிமையைத் தரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply