கேழ்வரகு உளுந்து தோசை

Loading...

கேழ்வரகு உளுந்து தோசைகேழ்வரகு மாவு – 200 கிராம்
உளுத்தம் பருப்பு – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு

உளுத்தம் பருப்புடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

பருப்பு ஊறியதும் எடுத்து களைந்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

அதில் கேழ்வரகு மாவை சேர்த்து உப்பு போட்டு கலந்து வைக்கவும்.

கலந்து வைத்த மாவை ஐந்து மணி நேரம் வைத்திருக்கவும். மாவு பொங்கி வந்திருக்கும்.

தோசைக்கல்லில் நல்லெண்ணெய் தடவி மெல்லிய தோசையாக வார்க்கவும்.

இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும். தேங்காய் சட்னி, கார சட்னியுடன் பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply