கூந்தல் அழகிற்கு மூலிகை ஆலோசனைகள் | Tamil Serial Today Org

கூந்தல் அழகிற்கு மூலிகை ஆலோசனைகள்

Loading...

கூந்தல் அழகிற்கு மூலிகை ஆலோசனைகள்• நல்லெண்ணெய் மற்றும் நெல்லிக்காய் சாறு இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து காய்ச்சி, வடிகட்டித் தேய்த்துக் குளித்து வந்தால் இளநரை மறைந்து கூந்தல் கருகருவென வளரும்.

• புழுவெட்டு சில சமயம் தலை முழுவதையும் வழுக்கையாக்கிவிடும். இதற்குக் கடுகெண்ணெயைத் தடவிக் குளித்து வந்தால் குணம் தெரியும்.

• அரை கப் தேங்காய்ப் பாலில் ஒரு எலுமிச்சம்பழச் சாறு கலந்து அதை மயிர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து பதினைந்து நிமிடங்கள் கழித்து அலசி வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

• முட்டையின் மஞ்சள் கருவைத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி வளர்ச்சியடையும்.

• நீலகிரித் தைலத்தை சூடு செய்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் தலையைக் கட்டிக்கொண்டு சிறிது நேரம் கழித்து அலசவும். இப்படிச் செய்து வந்தால் பொடுகு நீங்கிக் கூந்தல் சுத்தமாகும்.

Loading...
Rates : 0
VTST BN