கூகுள் டிரான்ஸ்லேட்டர் உதவியுடன் பெண்ணுக்கு பிரசவம்!

Loading...

கூகுள் டிரான்ஸ்லேட்டர் உதவியுடன் பெண்ணுக்கு பிரசவம்!அயர்லாந்தில் மொழி தெரியாத பெண் ஒருவருக்கு கூகுள் டிரான்ஸ்லேட்டர்(Google Translator) மூலம் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
அயர்லாந்தில் வசிக்கும் காங்கோ நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உடனே ஆம்புலன்சில் கார்க் பல்கலைகழக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவருடன் ஆம்புலன்சில் பயணம் செய்த ஹெர்ரி மற்றும் ஷேன் என்ற இரண்டு செவிலியர்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும், ஆனால் கர்ப்பிணி பெண்ணுக்கோ ஸ்வாகிலி மொழி மட்டுமே தெரியும்.
இந்நிலையில் மெக்ரோமுக்கும், லிஸ்ஸார்டாவுக்கும் இடைப்பட்ட சாலையில் சென்று கொண்டிருந்த போது கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்தது.
உடனடியாக பிரசவம் பார்த்தால் மட்டுமே தாய்க்கும், சேய்க்கும் நலம் என்ற நிலை, அப்பெண் பேசுவது செவிலியர்களுக்கு புரியவில்லை.
உடனே தனது போனில் கூகுள் டிரான்ஸ்லேட்டர்(Google Translator) உதவியுடன் ஸ்வாகிலி மொழியை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து அப்பெண்ணுடன் பேசி பிரசவம் பார்த்தனர்.
அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார், சாமர்த்தியமாக செயல்பட்ட இரண்டு செவிலியர்களுக்கும் பாராட்டுகள் வந்து குவிகின்றன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply