குஸ்கா (பிளெய்ன் பிரியாணி)

Loading...

குஸ்கா (பிளெய்ன் பிரியாணி)
தேவையானவை:

சீரகச் சம்பா அரிசி – 300 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
புதினா – அரை கைப்பிடி
கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி
பிரியாணி இலை – 2
பச்சை மிளகாய் – 6 (இரண்டாக உடைத்தது)
தேங்காய்ப்பால் – 100 மில்லி
தயிர் – 100 மில்லி
கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சைப்பழம் – 1
நெய் – 50 மில்லி
எண்ணெய்- 50 மில்லி
வெங்காயம் – 2
ஃப்ரைட் ஆனியன் – சிறிது அலங்கரிக்க
உப்பு – தேவையான அளவு
இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்


செய்முறை:

சீரகச் சம்பா அரிசியை இருபது நிமிடம் தண்ணீர் ஊற்றி ஊற விடவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நிறம் மாற வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதங்கியதும், கொத்தமல்லித்தழை புதினா, தயிர், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்து வதக்கவும். இதில் அரை லிட்டர் தண்ணீர், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து முக்கால் பதம் வேக விடவும். தண்ணீர் வற்றியதும் அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து தீயை முற்றிலும் குறைத்து. மூடி போட்டு அதன் மேல் கனமான பொருளை வைத்து இருபது நிமிடம் வேக விடவும். பின்பு மூடியைத் திறந்து நெய் ஊற்றி கிளறி ஃப்ரைட் ஆனியனால் அலங்கரித்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply