குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன மேக் – அப் போடலாம்?

Loading...

குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன மேக் – அப் போடலாம்பள்ளி விழாக்கள் மாறுவேடப் போட்டிகள் போன்றவற்றிற்காக உங்கள் குழந்தைகளுக்கு மேக்-அப் போட்டு அனுப்புகிறீர்களா… இதோ உங்களுக்காக சில டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் சருமம் மிக மென்மையானதாக இருக்கும். அவர்களுக்கு மேக்-அப் போடும் போது, பாதுகாப்பான மற்றும் மென்மையான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
* தண்ணீர் அல்லது சிலிக்கானை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துங்கள். அவை மிதமானதாக இருக்கும். குறைந்த அலர்ஜி கொண்ட (ஹைப்போ-அலர்ஜனிக்) என்று குறிப்பிடப்பட்டுள்ள அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது. இவை பொதுவாக, எரிச்சலூட்டும் பொருட்கள் எதுவும் இன்றி, குறைந்த நிறமிகள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும்.
இவ்வகை மேக்-அப்பில் எரிச்சலூட்டும் மற்றும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எதுவும் இல்லாததால், அவற்றை குழந்தைகளுக்கு பயன் படுத்துவது நல்லது.
* தண்ணீரில் கரையாத (வாட்டர் புரூப்) மற்றும் கறை உண்டாக்காத “ஐ’ லைனர்களை பயன்படுத்தலாம். ஏனென்றால், குழந்தைகள் அடிக்கடி தங்கள் கண்களை தேய்த்துக் கொள்வர். அப்போது இவை அழியாமல் இருக்கும்.
* வண்ண லிப் பாம்கள், குழந்தைகளின் உதடுக்கு நிறம் கொடுப்பதோடு, அவர்களின் உதடுகள் உலராமல் ஈரப்பதத்துடன் இருக்க உதவுகிறது.
* கழுவினால் அகன்று விடும் வகையிலான நெயில் பாலிஷ்கள் பயன்படுத்தலாம். இதனால், சாப்பிடும் போது குழந்தைகளின் வயிற்றுக்குள் நெயில் பாலிஷ் பெயின்ட்கள் சென்றுவிடும் என்ற அச்சம் இருக்காது.
* எப்போதும் மென்மையான பீச், பிங்க் போன்ற கலர்களையே குழந்தைகளுக்கு தேர்ந்தெடுப்பது சிறந்தது. குழந்தைகளுக்கு குறைந்த அளவே மேக்-அப் போட வேண்டும்.
எவ்வாறு மேக்-அப் போடுவது:
பள்ளி விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், மாறுவேடப் போட்டிகள் என்று எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் குழந்தைகளுக்கு மேக்-அப் போடுவதற்கு முன் அவர் களின் முகத்தை மிதமான கிளென்சர் பயன்படுத்தி சுத்தப்படுத்திய பின், மிதமான மாய்ச்சரைசர் லோஷன் தடவ வேண்டும்.
மேடை விழாக்கள்:
இந்த வகை மேக்-அப்கள், 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு உகந்தது.
* முதலில் முகத்தை சுத்தப்படுத்தி, ஆல்கஹால் இல்லாத டோனர், அதன் பின், ஆயில் ப்ரீ பவுண்டேஷன் பயன்படுத்த வேண்டும்.
* பின், “ஐ’ ஷேடோ அப்ளை செய்து விட்டு, அவர்களின் மேல் இமையில் “ஐ’ லைனர் வைத்து, சமமாக வரைய வேண்டும்.
* லிப் லைனர் வைத்து அவர்களின் உதட்டில் வரைந்துவிட்டு, அதனுள் லிப் கலரை நிரப்ப வேண்டும்.
* பின், நிறமற்ற பவுடரை பிரஷ் மூலம் தடவ வேண்டும்.
அலர்ஜியை தவிர்க்க:
தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் அதிகளவில் மேக்-அப் போடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு மேக்-அப் போடுவதால், அவை சருமத்தில் காணப்படும் துளைகளை அடைத்துக் கொண்டு பரு உண்டாக வழிவகுக்கிறது.
* எப்போது மேக்-அப்பை கலைக்கும் போது மிதமான கிளென்சர்களை பயன்படுத்த வேண்டும் அல்லது குழந்தைகளுக்கான டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்தலாம்.
* வாட்டர் புரூப் “ஐ’ மேக்-அப் ரிமூவரை பயன்படுத்தலாம். உதட்டில் காணப்படும் சாயத்தை நீக்க, சிறிதளவு வாஸ்லின் தடவி, பஞ்சு மூலம் அவற்றை துடைத்து சுத்தம் செய்யலாம்.
* புண்கள் ஏற்பட்டால், கத்தாழை ஜெல் தடவலாம்.
இவை அனைத்தையும் செய்தாலும், மேக்-அப் என்பது, சும்மா ஜாலிக்காக செய்வது தான் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைத்து, அவர்களின் திறமை, தன்னம்பிக்கை மற்றும் அடக்கம் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு மேக்-அப் இல்லாமலேயே ஜொலிக்க பெற்றோர்தான் உதவ வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply