குளு குளு’ மல்லி! பழகிய பொருள்.. அழகிய முகம்!

Loading...

குளு குளு’ மல்லி! பழகிய பொருள்.. அழகிய முகம்!த னது பூ, இலை, வேர் என அத்தனையையும் நம் அழகுக்கு அள்ளிக் கொடுக்கும் மல்லிகைச் செடிக்கு ஒரு மாலையே போடலாம். உடம்பை குளுமையாக்கி, தோலையும், கூந்தலையும் மிருது வாக்கும் மல்லிகையின் அசத்தல் டிப்ஸ் இங்கே…

உ டம்பின் சூடு அதிகமானால் கண்கள் பொங்கி எரிச்சலை உண்டாக்கும். தினமும் தலைக்கு தடவிக் கொள்ள இந்த மல்லிகைப் பூ எண்ணெய் ஒரு வரப்பிரசாதம்தான்…

குண்டு மல்லிகையை மிக்ஸியில் அரைத்து துணியில் கட்டி தொங்க விடுங்கள். அதிலிருந்து விழும் சாறில் ஒரு சொட்டு எடுத்து, அரை கப் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தலைக்கு தடவி வாருங்கள்.

இப்படி செய்து வந்தால், கண் எரிச்சல் என்பதே இருக்காது. எப்போதும் குளிர்ச்சியை உணரலாம்.

சிலருக்கு மல்லிகைப் பூ வாசம் தலைவலியை ஏற்படுத்திவிடும். அவர்கள் 4 சொட்டு மல்லிகைப் பூ சாறுடன் அரை கப் தேங்காய் எண்ணெய் கலந்து வாரம் ஒரு முறை மட்டும் தலைக்கு தேய்த்து சீயக்காய் போட்டு அலசலாம். கூந்தல் பூ போன்று மிருதுவாகவும், வாசத்துடனும் இருக்கும். தலைவலியும் வராது.
த லையை அரித்து எடுக்கும் பேனை போக்கு வதில் மல்லிகை செடியின் வேர் அற்புதமான ஒரு கிருமிநாசினியாக செயல்படுகிறது.

மல்லிகை செடியின் வேர், வசம்பு இரண்டையும் தனித்தனியே காயவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் சம அளவு எடுத்து பேஸ்டாகும் அளவுக்கு எலுமிச்சை சாறை சேருங்கள். தலையில் நன்றாக தேய்த்து 10 நிமிடம் கழித்து அலசி விடுங்கள்.

தலையை இம்சிக்கும் பேன், பொடுகு, சொரி, சிரங்கு என அத்தனை தொல்லையும் விரைவிலேயே விலகி ஓடி, தலை சூப்பர் சுத்தமாக்கிவிடும்.
எ ன்னதான் பல்லை இரண்டு முறை தேய்த்தாலும், சிலரது வாய் துர்நாற்றம் வீசிக் கொண்டேதான் இருக்கும். இந்த துர்நாற்றத்தை துரத்தி அடிக்க உதவுகிறது மல்லிகை செடியின் இலை.

ஜாதி மல்லி இலை – 1, விளாம்பழ இலை – 1, நார்த்தங்காய் இலை – 1 மூன்றையும் வாயில் போட்டு மென்று துப்பிவிடுங்கள். பிறகு, வெந்நீரால் வாயை கொப்பளித்து விடுங்கள்.

‘‘வாய் நாற்றமா? எனக்கா?’’ என்று கேட்பீர்கள்.
வா தத்தினால் ஏற்படும் வீக்கத்தை போக்குவதிலும் மல்லிகை இலை அருமருந்துதான்.

மல்லிகைச் செடியின் இலையை நல்லெண்ணெய் விட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு, மிதமான சூட்டில் அதை ஒரு துணியில் கட்டிக் கொண்டு, வீக்கத்தின்மீது ஒத்தடம் கொடுங்கள்.

வீக்கம் குறைந்துவிடும். ஓரிரு வாரத்தில் வீக்கம் ஏற்பட்ட தடயம்கூட தெரியாது.

பா தத்தில் துருத்தி நிற்கும் ஆணியை அடியோடு அகற்றுகிறது மல்லிகை செடியின் இலை.

மல்லிகை செடியின் இலையை உலக்கையால் இடித்து சாறு எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள்.

பஞ்சு போல் பாதம் மிருதுவாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply