குதிரைவாலி ஆப்பம்

Loading...

குதிரைவாலி ஆப்பம்குதிரைவாலி – முக்கால் டம்ளர்
பச்சரிசி – கால் டம்ளர்
ஜவ்வரிசி – ஒரு தேக்கரண்டி
தேங்காய் – சிறிது
சாதம் – ஒரு தேக்கரண்டி
தோசை மாவு – ஒரு தோசை அளவு ( 2 கரண்டி )
சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
சோடா உப்பு, உப்பு – தேவையான அளவு

குதிரைவாலி, பச்சரிசி, ஜவ்வரிசி மூன்றையும் ஐந்து மணிநேரம் ஊற வைக்கவும்.

ஊறியதும் தேங்காய், சாதம் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

அரைத்த உடன் அதில் தோசை மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

மாவை எட்டு மணி நேரம் புளிக்க விடவும். புளித்ததும் அதில் சர்க்கரை, சோடா உப்பு சேர்த்து கலக்கவும்.

கலந்து வைத்திருக்கும் மாவை தோசைக்கல்லில் வார்க்கவும்.

மூடி வைத்து ஆப்பமாக சுட்டு எடுக்கவும்.

சுவையான சத்தான குதிரைவாலி ஆப்பம் தயார்.

தேங்காய்ப்பாலுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply