கீரை புலவு

Loading...

கீரை புலவு

தேவையானவை:
பாசுமதி அரிசி – ஒரு கப், பசலைக் கீரை – ஒரு கட்டு, பச்சைமிளகாய் – 4, வெங்காயம் – 1 (நறுக்கிக் கொள்ளவும்), இஞ்சி, பட்டை – தலா சிறிய துண்டு, பூண்டு – 2 பல், நெய்யில் வறுத்த முந்திரி, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம், சோம்பு – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பசலைக் கீரையை நன்றாகக் கழுவி, இஞ்சி, பூண்டு, சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து லேசாக வேகவைத்து அரைத்துக் கொள்ளவும். குக்கரில் நெய் விட்டு சூடாக்கி பட்டை, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, ஊறிய அரிசியை சேர்த்து, அரைத்த கீரை, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். குக்கரை மூடி, குறைந்த தீயில் 7 முதல் 10 நிமிடம் சமைக்கவும். முந்திரியைத் தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply