கில்லிக்கு பிறகு தெறிதான்: ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை

Loading...

கில்லிக்கு பிறகு தெறிதான்: ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை

விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது அடுத்தக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

‘தெறி’ ஜி.வி.பிரகாஷுக்கு 50-வது படம் என்பதால் இப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் கடும் சிரத்தை எடுத்து இசையமைத்து வருகிறார். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் பாடல்கள் குறித்து கூறும்போது, விஜய் நடித்த ‘கில்லி’ படத்திற்கு பிறகு ‘தெறி’ படத்தின் பாடல்கள்தான் பட்டி தொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆகப் போகிறது.

குறிப்பாக, ரோகேஷ் எழுதியுள்ள ‘ஜித்து ஜில்லாடி’ என்ற பாடல் விஜய்யின் அறிமுக பாடல்களிலேயே முதன்மையானதாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

‘தெறி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை மீனாவின் மகள் நானிகா இந்த படத்தில் விஜய்க்கு மகளாக நடித்துள்ளார். மேலும், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply