கிரன்ச்சி சோயா

Loading...

கிரன்ச்சி சோயா
தேவையானவை :
சோயா உருண்டைகள் (மீல் மேக்கர்) – 20, வெந்தயக்கீரை – சிறுகட்டு (கீரையின் இலைகளை மட்டும் ஆய்ந்து அலசவும்), சின்ன வெங்காயம் – 10, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 4 பல், பச்சை மிளகாய் – 2, கார்ன்ஃப்ளார், கடலை மாவு, தயிர் – தலா 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை :
சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டு எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, நீரை ஒட்டப்பிழிந்து மிக்ஸியில் அரைத்து உதிர்த்துக் கொள்ளவும். உதிர்த்த சோயாவுடன் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி… சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply