கால் நகங்களைப் பாதுகாக்க

Loading...

கால் நகங்களைப் பாதுகாக்ககால் நகங்களையும் முதலில் சுத்தப்படுத்தவும், பிறகு ஷேப் செய்யவும்.
வாயகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர், சிறிது ஷாம்பு, சிறிது டெட்டாய்ல், சிறிது கல் உப்பு, சில துளிகள் கிளிசரின் மற்றும் <<எலுமிச்சம் பழச்சாறு கலந்து, கால் களை அதில் ஊற விடவும், பதினைந்து நிமிடங்கள் கழித்து, பழைய பல் துலக்கும் பிரஷ்ஷால் கால் முழுவதும் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும். கால்களை நன்றாகத் துடைத்து க்யூட்டிகிள் க்ரீம் போட்டு மசாஜ் செய்யவும். சிறிதுநேரம் ஊறியதும், பஞ்சால் துடைத்து, நக இடுக்குகளைச் சுத்தப் படுத்திவிட்டு, நெயில் பாலிஷ் போடவும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் கைகளையும், பாதங்களையும் ஆலிவ் எண்ணெயால் மசாஜ் செய்து வரலாம். பீஸ் வாக்ஸ் கலந்த ஆயின்மென்ட்டுகளை, பாதங்களில் வெடிப்பு உள் ளோர் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி, கை மற்றும் கால் முட்டிகளில் தேய்த்து வர, அந்த இடங்களில் உள்ள கருமை மறையும். நக வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிப்பது சைனாகிராஸ். எனவே, தினமும் இரவு பாலிலோ, சுடு தண்ணீரிலோ சிறிதளவு சைனாகிராஸ் கலந்து சாப்பிடுவது நக வளர்ச்சியை சீராக் கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply