கார்ன்ஃப்ளார் அல்வா

Loading...

கார்ன்ஃப்ளார் அல்வாதேவையானவை: கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 100 கிராம், சர்க்கரை – 150 கிராம், நெய் – 100 கிராம், கேசரி பவுடர் – சிறிதளவு, வறுத்த முந்திரி, உலர் திராட்சை, வெள்ளரி விதை – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.
செய்முறை:சோள மாவில் கேசரி பவுடர் கலந்து, சிறிதளவு நீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். சர்க்கரையில் ஒரு கரண்டி நீர் விட்டு முத்து பாகு வருகையில் (பாகு கொதிக்கும்போது முத்து முத்தாக நுரைத்து வரும்) கரைத்த சோள மாவு, நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும். கலவை வெந்து ‘பள பள’வென கிளாஸ் போல் வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, உலர் திராட்சை, வெள்ளரி விதை சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய பின் வில்லைகள் போடவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply