கவுதம்-தனுஷ் இணையும் காதல் படம்

Loading...

கவுதம் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு ‘அச்சம் என்பது மடமையடா’ படம் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தில் சிம்பு-மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இதைத் தொடர்ந்து கவுதம் மேனன் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படம் ரொமான்ஸ் கலந்த காதல் படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை குறுகிய நாட்களில் முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

தனுஷ் கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளன. தற்போது துரை.செந்தில்குமார் இயக்கும் ‘கொடி’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ், இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ மற்றும் ஹாலிவுட் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

எனவே, தனுஷ் அடுத்த எந்த படத்தில் நடிக்கப்போகிறார் என்பது கொடி படப்பிடிப்பு முடிந்தபிறகே தெரிய வரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply