கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

Loading...

கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள்பெண்களுக்கு பொதுவாக கர்ப்பத்தின் அறிகுறிகள் அவர்களது முதல் தவறிய மாதவிடாய் காலத்திலிருந்தே தெரிய ஆரம்பிக்கும். உடலில் கர்ப்ப ஹார்மோன் அளவு அதிகரிப்பதால் இந்த அறிகுறிகள் தென்படுகின்றன. கர்ப்ப காலத்தில் முதல் 3 மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும்.

இந்த காலத்தில் கருவின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் மற்றும் அனைத்து உறுப்புகளையும் உருவாகின்றன. எனவேதான், இந்த காலகட்டத்தில் மகப்பேறு மருத்துவரின் அனுமதியின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது.

சில மருந்துகள் கருவை ஊனமாகவோ, கலையவோ செய்ய வாய்ப்பிருக்கிறது. மேலும் முதல் 3 மாதங்களில் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு ஆகியவை நம்மை அணுகாமல் பாதுகாப்பாக இருத்தல் வேண்டும். மேலும் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.

கர்ப்பகால அறிகுறிகள் சிலருக்கு வேறு சில காரணங்களாகவும், வேறு சில வியாதிகளாகவும்கூட ஏற்படலாம். அதனால், அறிகுறிகள் வைத்து கர்ப்பத்தை கண்டறிவதைவிட நம்பகமான அறிவியல் முறை பரிசோதனைகளை மேற்கொள்வது சிறந்தது.

பெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் 2 அல்லது 3 மாதங்களில் கருதரிப்பதை உறுதி செய்துகொள்ள முடியும் என்றாலும் சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் பரிசோதனை ஆகியவற்றின் மூலமே கர்ப்பம் தரிப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.

மேலும், கர்ப்பம் கருப்பைக்குள்ளேதான் உள்ளது என்பதையும் கட்டாயம் ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். கருப்பைக்கு வெளியே கூடியிருந்தால் அது தாயின் உயிருக்கே ஆபத்தாய் அமைந்துவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply