கருத்து கணிப்பில் முதலிடம் பிடித்த அஜித்

Loading...

கருத்து கணிப்பில் முதலிடம் பிடித்த அஜித்

சென்னை லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான ‘மக்கள் ஆய்வு’ எனும் அமைப்பு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு கருத்துக் கணிப்பு நடத்தியது.

தமிழ்நாட்டில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு 16 சதவீதம் பேர் அஜித்தையும், 15.9 சதவீதம் பேர் ரஜினியையும், 9.2 சதவீதம் பேர் விஜயையும் கூறியுள்ளனர். கமல்ஹாசனுக்கு 5.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சூர்யாவுக்கு 4.3 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது.

பிடித்த முதல்-அமைச்சர் யார் என்ற கேள்விக்கு 46.5 சதவீதம் பேர் காமராஜரை சுட்டிக் காட்டியுள்ளனர். அவருக்கு அடுத்தப்படியாக எம்.ஜி.ஆருக்கு 27.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருணாநிதிக்கு 8.7 சதவீதம், அண்ணாவுக்கு 7.1 சதவீதம் பேர் ஜெயலலிதாவுக்கு 4.4 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply