கம்பு – வெந்தய தோசை

Loading...

கம்பு - வெந்தய தோசைதேவையான பொருட்கள் :

கம்பு மாவு -1 கப்,
அரிசி மாவு -1 கப்,
வெந்தயம் -1/4 கப்,
புளித்த தயிர் 1/4 கப்,
பச்சை மிளகாய் -5,
உப்பு ருசிக்கேற்ப,

தாளிப்பதற்கு:

சீரகம் -1 ஸ்பூன்,
ஒன்றிரண்டாக உடைத்த மிளகு -1 ஸ்பூன்,
கடுகு -1/4 ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

• வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊறவைத்து அதை வெண்ணெய் போல் அரைத்துக் கொள்ளவும்.

• பச்சை மிளகாயை உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, அரிசி மாவு, அரைத்த வெந்தயம், மிளகாய் விழுது, தயிர் சேர்த்து கட்டியில்லாமல் தோசை மாவு போல் கரைத்துக் கொள்ளவும். தேவையெனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், மிளகு தாளித்து மாவில் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

• பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை தோசைகளாக ஊற்றி முறுகலாக வந்ததும் எடுக்கவும்.

• வெந்தயம் சேர்ப்பதால் இது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply