கம்பு வடை

Loading...

கம்பு வடை
தேவையானவை:
கம்பு – 250 கிராம், தேங்காய்த் துண்டுகள் – 3, சீரகத் தூள் – ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
கம்பில் தண்ணீர் ஊற்றி, கெட்டியாக மாவு போல் அரைத்துக்கொள்ளவும். அரைக்கும்போது தேங்காய் சேர்க்கவும். அரைத்த மாவில், சின்ன வெங்காயம், சீரகத் தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கிக்கொள்ளவும். பிறகு, அரைத்த மாவை சிறு உருண்டையாகப் பிடித்து, கையில் வைத்து வடை அளவுக்குத் தட்டி, காயும் எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வந்தவுடன் எடுக்கவும்.

பலன்கள்:
வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும். அஜீரணக் கோளாறைச் சரிசெய்யும். உடல் சூட்டைத் தணிக்கும். இதயத்தை வலுவாக்கி, நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி தரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply