கண்ணில் கருவளையம் நீங்க

Loading...

கண்ணில் கருவளையம் நீங்கவெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது. கரு வளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

வெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன், அதில் இருந்து 2 ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள். பிரித்தெடுத்த தண்ணீரின் சிறிது எலுமிச்சைச் சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்து விடும்

பொதுவாக கண்களுக்கு அதிக ஸ்ட்ரெஸ் கொடுக்கும் வேலைகளான டி.வி பார்த்தல், மிகப் பிரகாசமான ஒளியில் நீண்ட நேரம் இருத்தல், போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கண்ணுக்கு பலம் தரும், இரும்புச்சத்து அதிகமுள்ள, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கன்னி கீரை, முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, அவரைக்கீரை, ஆப்பிள், நெல்லிக்காய், விளாம்பழம், நாவல்பழம், கமலா ஆரஞ்சு, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், பாகற்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply