கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்—அழகு குறிப்புகள்., | Tamil Serial Today Org

கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்—அழகு குறிப்புகள்.,

Loading...

கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்---அழகு குறிப்புகள்.,கடலை மாவு சமையலறையில் பயன்படும் பொருளாக மட்டுமல்லால், ஒரு அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இதுவரை இந்த கடலை மாவை குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக தான் பயன்படுத்தி வந்தோம். அதே கடலை மாவை வைத்து ஃபேஸ் பேக் செய்தால், கரும்புள்ளிகள், முகப்பரு, பழுப்பு நிற சருமம் போன்றவை நீங்கிவிடும்.

மேலும் சருமத்திற்கு எந்த பாதிப்பையும் தராது. 1/2 கப் பாலுடன் மஞ்சள் கடலை மாவை சேர்த்து, சற்று கெட்டியான பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் இந்த கலவையின் போது சிறிது தேனை சேர்த்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.

பாதாமை இரவில் படுக்கும் முன் ஊற வைத்து, பின் காலையில் அதனை நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து, எலுமிச்சை சாற்றை விட்டு, ஒரு டீஸ்பூன் கடலை மாவை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து பின் கழுவிட வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும கரும்புள்ளிகள் நீங்கி, முகம் நன்கு பளிச்சென்று காணப்படும்.

இந்த ஃபேஸ் பேக்கில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளன. முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால், அதற்கு முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அத்துடன் ஒரு ஸ்பூன் கடலை மாவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

இதனால் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கி, முகம் அழகாக இருக்கும். தயிரை கடலை மாவுடன் கலந்து முகத்தில் தடவி, ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

கடலை மாவுடன் தயிர் கலந்து ஃபேஸ் பேக் செய்தால், சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. உடலில் அதிகமாக சூடு இருந்தால், அதனை சரிசெய்ய இந்த ஃபேஸ் மாஸ்க் சிறந்தது. ஏனெனில் அதில் உள்ள தயிர் வெப்பத்தை தணித்துவிடும்

Loading...
Rates : 0
VTST BN