ஓமவல்லி பஜ்ஜி

Loading...

ஓமவல்லி பஜ்ஜி
தேவையானவை:
ஓமவல்லி இலை – 10 (சுத்தம் செய்து காம்பு நீக்கவும்), கடலை மாவு – 75 கிராம், அரிசி மாவு – 15 கிராம், பச்சை மிளகாய் விழுது – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, சமையல் சோடா – ஒரு சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது, உப்பு, பெருங்காயத்தூள், சமையல் சோடா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கலக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய் சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். ஓமவல்லி இலைகளை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:
பச்சை மிளகாய் விழுதுக்குப் பதில் அரை டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்தும் செய்யலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply