ஓட்ஸ் சீரியல்

Loading...

ஓட்ஸ் சீரியல்
தேவையானவை:
ஓட்ஸ் – 2 கப், நறுக்கிய பாதம், பிஸ்தா, அக்ரூட் – தலா அரை கப், சூரியகாந்தி விதை, பூசணி விதைகள், காய்ந்த திராட்சை, காய்ந்த அத்திபழம் – தலா அரை கப், தேன் – 3 டேபிள்ஸ்பூன், தேங்காய் எண்ணெய் (அ) சமையல் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
மைக்ரோவேவ் அவனை முன்கூட்டியே 300 டிகிரி சூடு பண்ணவும். ஓட்ஸ் மற்றும் பருப்பு வகை அனைத்தையும் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்து, எல்லாப் பொருட்களின் மீது தேன் மற்றும் எண்ணெயை ‘கோட்டிங்’ போல மேலே விட்டுக் கலக்கவும். மைக்ரோவேவ் அவனில் வைத்து, சிறிது நேரம் கழித்து எடுத்து, ஆறவைத்துப் பரிமாறவும். இதனை காற்றுப் புகாத டின்னில் அடைத்துவைக்கலாம்.

குறிப்பு:
இரண்டு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குக் கொடுக்கலாம். மிகவும் சத்தானது. வைட்டமின் அதிகம் நிறைந்தது. காலை உணவாகவோ அல்லது மாலைச் சிற்றுண்டியாகவோ இதைச் சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply