ஏ.ஆர்.ரகுமானுக்கு வழிவிட்ட யுவன் சங்கர் ராஜா | Tamil Serial Today Org

ஏ.ஆர்.ரகுமானுக்கு வழிவிட்ட யுவன் சங்கர் ராஜா

Loading...

ஏ.ஆர்.ரகுமானுக்கு வழிவிட்ட யுவன் சங்கர் ராஜா

ஏ.ஆர்.ரகுமான் சென்னை மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ‘நெஞ்சே எழு’ என்கிற இசை நிகழ்ச்சியை பெரு நகரங்களில் நடத்தி வருகிறார்.

கடந்த 16-ம்தேதி சென்னையில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. இதையடுத்து வருகின்ற 23-ம் தேதி கோவையில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் நெஞ்சே எழு காரணமாக அதே நாளில் யுவன் சங்கர் ராஜா நடத்த இருந்த ‘வாய்ஸ் ஆப் யுவன்’ இசை நிகழ்ச்சி தற்போது தள்ளிப் போயிருக்கிறது.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “யார்ஸ் மீடியா நெட்வொர்க் என்கின்ற எங்களது நிறுவனம் மூலமாக யுவன் சங்கர் ராஜாவின் வாய்ஸ் ஆப் யுவன் இசை நிகழ்ச்சியை வருகின்ற 23-ம் தேதி கோவையிலும், 26-ம்தேதி மதுரையிலும் நடத்தத் திட்டமிட்டு இருந்தோம்.

ஆனால் 23-ம்தேதி ரகுமானின் நெஞ்சே எழு நிகழ்ச்சி கோவை நகரில் நடைபெறுகிறது. இதனால் யுவனின் இசை நிகழ்ச்சியை நாங்கள் தள்ளிவைக்கிறோம். மேலும் எதிர்பாராமல் நடந்த இந்த செயலுக்காக நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

விரைவில் வாய்ஸ் ஆப் யுவன் இசை நிகழ்ச்சியின் புதிய தேதிகளை நாங்கள் வெளியிடுவோம். நீங்கள் ஏற்கனவே டிக்கெட் வாங்கியிருந்தால் அதற்குரிய பணம் விரைவாக உங்களுக்கு திருப்பி அளிக்கப்படும்” என்று தெரிவித்து இருக்கின்றனர்.

Loading...
Rates : 0
VTST BN