எக்லெஸ் மல்டிகிரைன் பால் கேக்

Loading...

எக்லெஸ் மல்டிகிரைன் பால் கேக்
தேவையானவை:

மல்டிகிரைன் மாவு – 35 கிராம்
தினை, வரகு, குதிரைவாலி, சாமை கலந்தது)
கோதுமை மாவு- 30 கிராம்
வெண்ணெய் – 40 கிராம்
சர்க்கரை – 60 கிராம்
பேக்கிங்பவுடர் – கால் டீஸ்பூன்
பால் – 40 மில்லி
பிஸ்தா அல்லது பட்டர் ஸ்காட்ச் எசென்ஸ் – அரை டீஸ்பூன்
முந்திரி மற்றும் பாதாம் – தேவையான அளவு


செய்முறை:

மிதமான சூட்டில் அடுப்பை வைத்து வெண்ணெயை ஒரு நிமிடத்துக்்கு மட்டும் உருக்கி எடுக்கவும். இதனுடன் பால் சேர்த்து, சூடு ஆறியவுடன் சர்க்கரையையும் சேர்த்து நன்றாகக் கலக்கவேண்டும் (வெண்ணெய் சூடாக இருக்கும்போது சர்க்கரையைச் சேர்க்கக் கூடாது. அப்படிச் சேர்த்தால் சர்க்கரை கெட்டியாகி விடும்). இதனுடன் சலித்து வைத்துள்ள மல்டிகிரைன் மாவு , கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் சேர்த்து நன்றாகப் பொங்கி வரும்வரை கலக்கவும். இப்போது எசென்ஸை இதில் ஊற்றி விடவும். கேக் செய்யும் பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் தடவி அதன் மேல் சிறிது கோதுமை மாவு தூவி பாத்திரம் முழுக்கப் பரவ விடவும். அதன் மேல் கேக் மாவைக் கொட்டவேண்டும். கேக் பாத்திரத்தை லேசாக தரையில் தட்டி சமன்படுத்தவேண்டும். இதை குக்க‌ரில் வைத்து 25-30 நிமிடம் மிதமான சூட்டில் வேகவைத்து இறக்கி விடவும். கேக் ஆறியதும் முந்திரி பாதாம் பருப்புகளைத் தூவி அழகுபடுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு:

குக்கருக்கு பதிலாக கேக் செய்வதற்கு, ‘மைக்ரோ வேவ் அவன்’ பயன்படுத்துபவர்கள் அவனை 180 டிகிரியில் 25 நிமிடங்களுக்கு வைத்தும் கேக் தயரிக்கலாம்… சர்க்கரை சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்கள் மாவாக்கப்பட்ட பனங்கற்கண்டையும் கூட பயன்படுத்தலாம்.
கேக் தயாரிக்க மைதாவை விட இந்தச் சிறுதானியங்களைப் பயன்படுத்துவதால் உடலில் அதிக கார்போ-ஹைட்ரேட் சேருவதைத் தவிர்க்கலாம். அத்துடன் இந்த சிறுதானிய கேக்குகள் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தும் நிறைந்தவை

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply