உலகை கலக்கிய 2015-ன் TOP 10 மொபைல்கள்

Loading...

உலகை கலக்கிய 2015-ன் TOP 10 மொபைல்கள்உலக அளவில் மொபைல் போன்களுக்கான சந்தை ஆண்டு தோறும் விரிவடைந்து கொண்டே வருகிறது.

நபர் ஒருவர் ஒரு ஆண்டுக்கு மேல் ஒரே மொபைல் போனை பயன்படுத்தினால் ஆச்சரியமே.

அந்தளவு புத்தம் புதிய தொழில்நுட்பங்களுடன் மொபைல் போன்கள் சந்தையை கலக்குகின்றன.

அந்த வகையில் 2015ஆம் ஆண்டு அதிகம் விரும்பப்பட்ட மொபைல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

SAMSUNG GALAXY NOTE 5

தனது முந்தைய மொடல்களில் இருந்த சிறு சிறு குறைபாடுகளை களைந்து முற்றிலும் நவீன முறையில் இந்த நோட் 5 மொடலை சாம்சங் உருவாக்கியுள்ளது.

முந்தைய மொடல்களில் S pen மூலம் இயக்கும் போது சிறு தடங்கல்கள் இருந்தன. தற்போது அவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதனால் நான் சந்தைக்கு வந்த குறுகிய காலத்திலேயே அதிகவாடிக்கையாளர்களை பிடித்துள்ளது.

SAMSUNG GALAXY S6

கேலக்ஸி மொடலில் புதிதாக அறிமுகமாகிய இந்த மொபைல் எல்லா வசதிகளும் நிறைந்த ஒன்றாகவே திகழ்கிறது. எனினும் Radio மற்றும் External Memory Card வசதி இல்லை என்பது சின்ன நெருடல்.

iPHONE 6S

ஆப்பிள் என்ற பெயருக்காகவே பலரும் இதன் மேல் காதல் வைத்துள்ளனர். மற்ற மொபைல் நிறுவனங்கள் எல்லாம்அதி நவீன வசதிகளுடன் தங்களின் மொபைல் போன்களை சந்தையில் விற்பனை செய்து வந்த நிலையில் ஆப்பிள் மட்டும் சராசரி வசதிகளுடனே மொபைல் போன்களை தயாரித்துவந்தது.

ஆனால் தற்போது அந்த குறைகளையெல்லாம் சரி செய்து ஒரு சிறந்த மொபைலாக iPhone 6S வந்துள்ளது. விலைதான் கொஞ்சம்அதிகம், ஆனால் மொபைலின் தரத்துக்கேற்ற விலைதான்.

ONE PLUS 2

தனது மொபைல் மூலம் ஆப்பிள், சாம்சங் போன்ற ஜாம்பவான்களுக்கே சவால் விட்டிள்ளது சீன நிறுவனமான ஒன் பிளஸ்.

மற்ற மொபைல்களுடன் ஒப்பிடும்போது விலையில் குறைந்ததாக இருந்தாலும் திறனில் எந்த சமரசமும் இல்லாமல் விளங்குகிறது இந்த ஒன் பிளஸ் 2.

LENOVO K3 NOTE

தனது A6000, A6000+, A7000 போன்ற மொடல்கள் மூலம் மொபைல் சந்தையில் குறிப்பிடத்தக்க பெயரை லெனோவா நிறுவனம் பெற்றது.

தற்போது தனது முந்தைய தயாரிப்புகளை விட அளவில் திறனிலும் சிறந்த K3 Note மூலம் மொபைல் சந்தையை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

5.5 இன்ச் பெரிய திரை, 13 MP பின்பக்க கமெரா, 5MP முன்பக்க கமெரா, ஆண்ட்ராயிட் 5 (லாலிபாப்) போன்ற சிறந்த வசதிகள் நிறைந்த மொபைலை குறைந்த விலையில் தேடுபவர்களின் முதல் விருப்பமாக லெனோவா K3 Note திகழ்கிறது.

SONY XPERIA Z5

சோனி மொபைல்கள் பொதுவாக சிறிய அளவிலான திரையுடன் இருப்பதாக பலரும் குறை கூறுவர். அதனை சரி செய்யும் விதமாக 5.5 இன்ச் தொடு திரையுடன் சந்தையை தொட்டுள்ளது சோனி Z5.

அட்டகாசமான வடிவமைப்பு, அற்புதமான கமெரா, சிறப்பான கைரேகை சென்சார் ஆகியவை இதன் பிளஸ் பாயிண்டாக சொல்லப்படுகிறது.

இதில் உள்ள அதிநவீன கமெரா மூலம் 4K தரத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்யலாம் என்பது இதன் சிறப்பு.

LG G4

LG நிறுவனத்தின் முந்தைய மொடல்கள் இதுவரை சந்தையில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. அந்த குறையை போக்கும் விதமாக அமைந்துள்ளது LG G4 .

மற்ற மொபைல்களை போல் பிளாஸ்டிக் Back Cover இல்லாமல் Leather மூலம் அமைந்துள்ள இதன் Back Cover வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

Xiaomi MI NOTE

சர்வதேச மொபைல் சந்தையில் ஆப்பிள், சாம்சங், எச்.டி.சி, சோனி போன்றவை ஒரு வகை என்றால், ஒப்போ, ஹவாய், ஹானார் போன்றவை மற்றொரு வகை.

இந்த மற்றொரு வகையை சேர்ந்தது தான் ஜியோமி. சீனாவை சேர்ந்த இந்த நிறுவனம் தனது MI NOTE மூலம் சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது.

13 MP பின் பக்க கமெரா மூலம் 4K தரத்திலான வீடியோகளை எடுக்கலாம் என்பது சிறப்பு.

External Memory Card வசதி இல்லை என்பது இதன் குறையாக கூறப்படுகிறது. எனினும் குறைந்த விலையில் நிறைந்த பலன் என்பதால் இது வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

HONOR 7

சீனா நிறுவனமான ஹுவாயின் பிரமிக்கவைக்கும் தயாரிப்புதான் ஹானர் 7. முழுவதுமாக மெட்டல் மூலம்வடிவமைக்கப்பட்டுள்ளதோடு செய்கைகளை Support செய்யும் Finger Scanner உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

SAMSUNG GALAXY J7

சாம்சங் நிறுவனத்தின் புதிய அறிமுகம் தான் இந்த Galaxy J7. 13 MP கமெரா, 5.5 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராயிட் 5.1 போன்றவை இதன் பிளஸாக உள்ளது.

அதே வேளையில் இதன் டிசைனில் மாற்றம் இல்லாமல் மற்ற சாம்சங் மொடல்களை போலவே இருப்பது குறையாக பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply