உருளைக்கிழங்கு கோதுமை தோசை

Loading...

உருளைக்கிழங்கு கோதுமை தோசைதேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 1
கோதுமை மாவு – 1 கைப்பிடி
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

• உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்.

• வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• முதலில் வேக வைத்து தோரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும்.

• பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

• பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

• தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், உருளைக்கிழங்கு கோதுமை தோசை ரெடி!!!

Loading...
Rates : 0
VTST BN