உடல் வனப்பாக..! டிப்ஸ்! அழகு குறிப்புகள்!

Loading...

உடல் வனப்பாக..! டிப்ஸ்! அழகு குறிப்புகள்!
உடல் வனப்பாக..!

அவ்வப்போது உப்பு நீரில் குளித்து வருவது நல்லது. ஏனெனில், உப்பு நீர் ஆன்டிசெப்டிக், ஆன்டி பாக்டீரியா வாக செயல்படும்.

தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் ஆயிலை உடம்பில் தடவி, பிறகு கடலைமாவுடன் கற்றாழையைக் கலந்து தடவி குளித்து வர உடல் பளபளக்கும்.

கை, கால் பத்திரம்!

எந்த ஒரு டிடர்ஜென்டையும் நேரடியாகப் பயன்படுத்தாமல், கைகளில் ஹேண்ட் க்ரீம் தடவிக்கொண்டோ, காட்டன் கிளவுஸ் அல்லது பிளாஸ்டிக் கிளவுஸ் போட்டுக்கொண்டோ சலவை வேலைகளைச் செய்யலாம்.

கால்கள் சோர்வாக இருந்தால், ஒரு பக்கட் தண்ணீரில் கல் உப்பு, ப்ரூட் சால்ட் தலா ஒரு டீஸ்பூன் மற்றும் ரோஜா இதழ்கள் அல்லது ரோஸ் வாட்டரைக் கலந்து பாதங்களை அதில் வைத்தால், கால் நகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும், கால்களுக்கு புத்துணர்வூட்டும். பின் ஷாம்பு போட்டு கால்களைக் கழுவி, பாடி லோஷன் தடவினால் மிருதுவாகும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply