உடல் பருமன் பெண்களுக்கு ஆபத்தா?

Loading...

உடல் பருமன் பெண்களுக்கு ஆபத்தாஉடல் பருமன் ஆபத்தா என்ற கருத்து பலர் மத்தியில் நிலவி வருகிறது.
இது ஆபத்து தான் என்றாலும், சிலருக்கு நீர் அதிகமாக இருப்பதால் உடல் வீங்கிய நிலையில் இருக்கும்.

அதற்கு நீரினை குறைக்கும் காய்கறிகளை எடுத்துக்கொண்டு குறைத்துவிடாலாம். ஆனால், அளவுக்கதிமான எண்ணெய் உணவுகளால் சேரும் கரையாத கொழுப்புகளால் இதயநோய்கள் ஏற்படுகின்றன.

இந்த உடல்பருமனால் இருபாலருக்கும் ஆபத்துதான் என்றாலும், பெண்கள் கருவுறுதலுக்கு இந்த உடல்பருமன் ஒருவகையில் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

உடல் எடை கூடிக் கொண்டே சென்றால், குழந்தை பெறும் பாக்கியம் குறைத்து கொண்டே வருவதை நினைவில் கொள்ளுங்கள். உடல் பருமன், பெண்களின் சினைமுட்டை உற்பத்தியில் குறைபாட்டை ஏற்படுத்துகிறது.

இதனால், சினைப் பையில் கட்டிகள் வரும் ஆபத்து அதிகம். இத்தகைய பிரச்னைகளால், 5 சதவீத பெண்கள் குழந்தைப்பேறு அடைய முடியாமல், மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர்.

பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனுக்கு எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்துவதால், குழந்தை பாக்கியம் அடைவதில் சிக்கல் நேர்கிறது. இவர்களில் சிலருக்கு, கருவுறுதல் பல காலம் கழித்து நடக்கலாம் அல்லது ஆரோக்கியமான குழந்தைக்கான வாய்ப்பு குறையலாம்.

அது மட்டுமல்லாமல், உடல் பருமன் உள்ளவர்களுக்கு, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அதிகம். இதனால், ‘ப்ரீகிளாம்ப்சியா (Pre-eclampsia) என்ற பாதிப்பு ஏற்பட்டு, குழந்தைப்பேறு கனவாகவே இருக்கும்.

5% கர்ப்பிணி பெண்கள் இந்த ப்ரீகிளாம்ப்சியாவால் பாதிக்கப்படுகின்றன. இதனால் அப்பெண்களுக்கு மட்டுமின்றி வயிற்றில் இருக்கும் பிறக்காத குழந்தைக்கும் தீங்கு விளைகிறது.


இதற்கு என்ன செய்யலாம்?

குழந்தை வேண்டி காத்திருப்பவர்கள், சீரான உணவுப் பழக்கத்தை கடைபிடித்து, உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். இதனால், தாமதமின்றி குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், ஆரோக்கியமான குழந்தையும் பிறக்கும்.

ஆண்களின் உடல் பருமனும் (விந்து உற்பத்தி குறைபாடு) பெண்களின் கருவுறுதலை பாதிக்கும் என்பதால், ஆண்களும் உடல் எடையை பராமரிப்பது அவசியம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply