உடல் நாற்றத்தை விரட்டும் நூல்கோல்!

Loading...

உடல் நாற்றத்தை விரட்டும் நூல்கோல்!உடலுக்கு சர்வ நிவாரணமளிக்கும் நூல்கோலை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

புற்றுநோயை விரட்டும்

நூல்கோலில் அதிக அளவில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளும், பைட்டோகெமிக்கல்களும் உள்ளன. இவையும், நூல்கோலில் உள்ள Glucosinolatesம் சேர்ந்து புற்றுநோய் ஆபத்துகளைத் தவிர்க்கின்றன.

தினமும், உணவில் சிறிதளவு நூல்கோல் சேர்த்துக் கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தப்பிக்கலாம்.


இதயம் காக்கும்

நூல்கோலில் உள்ள அதீத விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் காக்கிறது. நூல்கோலின் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது.

இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு இதமானது.


எலும்புகளை பலப்படுத்தும்

நூல்கோலில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. அடிக்கடி உணவில் நூல்கோல் சேர்த்துக் கொள்பவர்களுக்கு மூட்டு வலி, ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் நைந்து போகிற பிரச்சனை, முடக்குவாதம் போன்றவை தவிர்க்கப்படும்.


நுரையீரலுக்கு பலம் தரும்

சிகரெட் பழக்கமுள்ளவர்களுக்கு சிகரெட்டில் உள்ள புற்றுநோய்க்குக் காரணமான கார்சினோஜென்கள், விட்டமின் ஏ பற்றாக்குறையை உருவாக்கும். அதன் விளைவாக நுரையீரல் வீக்கம் உள்ளிட்ட நுரையீரல் கோளாறுகள் உண்டாகும்.

நூல்கோலின் மேலுள்ள கீரைப்பகுதியில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுவதாக சொல்லப்படுகிறது.


செரிமானத்தை சீராக்கும்

நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. தவிர, இதில் உள்ள Glucosinolates வயிற்றுஉபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும் காரணமான Helicobacter Pylori என்கிற பாக்டீரியாவை எதிர்க்கக்கூடியது.


ஆஸ்துமாவை குணப்படுத்தும்

நூல்கோலில் உள்ள விட்டமின் சி, பொதுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுவதுடன், சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது.

இது ஆஸ்துமா நோயையும், அதன் அறிகுறிகளையும் விரட்டக் கூடியது. மூச்சுத்திணறலால் அவதிப்படுகிற நோயாளிகளுக்கு நூல்கோல் நல்ல மருந்தாவதாக ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.


உடல் நாற்றம் விரட்டும்

கோடை காலங்களில் உடல்நாற்றம் தவிர்க்க முடியாதது. நூல்கோல் சாறு குடிப்பதன் மூலம் இந்த வாடையைத் தவிர்க்கலாம்.


நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்

நூல்கோலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரிக்கக் கூடியது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply