உடல் எடையை குறைக்க உதவும் 5 குளிர்கால உணவுகள்!!!

Loading...

உடல் எடையை குறைக்க உதவும் 5 குளிர்கால உணவுகள்!!!

we

பொதுவாகவே ஆக்கம் கடினம், அழிப்பது எளிது என்பார்கள். ஆனால், உடல் எடையில் இது தலைகீழாக இருக்கிறது. உடை எடை அதிகரிப்பது எளிது, குறைப்பது கடினம். அதிலும் உட்கார்ந்தே வேலை செய்யும் முறையை கடைபிடிக்கும் நம்மால் உடல் எடையை குறைப்பது பெரிய சவால் தான்.
we
எத்தனை முயற்சிகள், எத்தனை பயிற்சிகள் செய்தும் கூட உடல் எடை குறைக்க முடியாமல் தவிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பசிக்கும் போது உணவு, வியர்வை சொட்ட உடல் வேலை, உடல் சோர்வடையும் போது உறக்கம் இந்த மூன்றையும் கடைபிடித்தாலே உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முடியும் என நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
சரி, இனி உடல் எடையை குறைக்க உதவும் குளிர்கால உணவுகள் பற்றிப் பார்க்கலாம்….
கேரட்
குளிர் காலத்தில் இறைச்சி உணவுகளுக்கு மாறாக கேரட்டை உண்ணலாம். இதில் கலோரிகள் குறைவு, எளிதாக செரிமானம் ஆகிவிடும். மேலும், இதனால் உடல் எடை அதிகரிக்காமல் காக்க முடியும்.
பசலைக்கீரை
கீரை உணவுகளில் நார்ச்சத்து அதிகம், இது செரிமானத்தை சரி செய்து அதிக பசியை குறைக்கும். மேலும் இதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் குளிர்காலத்தில் உடலுக்கு நல்ல உடற்சக்தியை அளிக்கிறது.
உருளைக்கிழங்கு
அனைவரும் உருளைக்கிழங்கு உடல் எடையை குறைக்காது என்று தான் நம்புகிறோம். ஆனால், இதில் இருக்கும் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து உடலில் தேங்கும் கெட்டுக் கொழுப்பை கரைக்க உதவுகிறது. நல்ல பயனடைய, உருளைக்கிழங்கை தோலோடு வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
வெங்காயம்
வெங்காயத்தில் இருக்கும் க்ரோமியம் எனும் மூலப்பொருள் உடல் எடையை குறைக்க சிறந்த கருவியாக உதவுகிறது. மேலும், இதிலிருக்கும் மினரல்ஸ் உடலின் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைக்கவும் பயனளிக்கிறது.
முள்ளங்கி
முள்ளங்கி ஒரு சிறிய சைவ காய்கறியாக இருப்பினும். இதில் நிறைய நார்ச்சத்து மற்றும் நீரின் பங்கு இருக்கிறது. இது பசியை குறைத்து, தேவையற்ற நொறுக்கு தீனி உண்பதை தடுக்கிறது, இதனால் உடல் எடை அதிகரிப்பதை வெகுவாக குறைக்க முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply