உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் அலுவலகங்களிலுள்ள காற்று

Loading...

உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் அலுவலகங்களிலுள்ள காற்றுஅலுவலகங்களில் உள்ள காற்று அங்கு பணிபுரிவோரின் உடல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று எச்சரித்துள்ளது.
தற்போதைய அலுவலகங்களுள் பெரும்பாலானவை முன்னையவை போல் அல்லாது ஜன்னல் மூடப்பட்டு, குளிரூட்டிகள் போடப்பட்டிருக்கும்.

இவ்வாறு இருப்பதனால் மூடிய பகுதிக்குள் காபனீரொட்சைட் (CO2) வாயுவின் செறிவு அதிகரிக்கின்றது எனவும், இதனால் கானீரெட்சைட் செறிவு அதிகம் கொண்ட வளியையே மீண்டும் சுவாசிக்க வேண்டியிருப்பதனால் உடல் நிலை பாதிப்புக்குள்ளாவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ் ஆய்விற்காக வெவ்வேறு அலுவலங்களிலுள்ள 24 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஊடாக 5,000 ppm (Parts Per Million) செறிவுடைய காபனீரொட்சைட் ஆனது உச்ச பாதுகாப்பு எல்லையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், அதற்கு அதிகமான செறிவு காணப்படின் அது ஆபத்தை விளைவிக்கும் எனவும், இதுவே 90,000 ppm ஆக காணப்படின் 5 நிமிடங்களில் உயிரைக் கொல்லும் அளவிற்கு ஆபத்தானது எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply